நியூயார்க்,
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் தீபக் தேஷ்பாண்டே (வயது 41). இந்திய வம்சாவளி. இவர் 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் அங்கு ஆர்லண்டோவைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் இணையதளம் வழியாக தொடர்பு கொண்டார். தான் ஒரு மாடலிங் ஏஜெண்ட் என்று அறிமுகம் செய்து கொண்டார். அந்த சிறுமியை, தனது நிர்வாண படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அந்த சிறுமியும் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.
அடுத்து, அதே சிறுமியை வேறு இருவரது பெயரில் தொடர்பு கொண்டு, தனக்கு தொடர்ந்து நிர்வாண படங்களை அனுப்பி வைக்காவிட்டால், ஏற்கெனவே பெற்று வைத்துள்ள நிர்வாண படங்களை பரப்பி விடப்போவதாக மிரட்டினார்.
அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் ஆர்லண்டோவுக்கு சென்ற தேஷ்பாண்டே, அங்கு அந்த சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தார். அந்த சிறுமியை ஆபாச படங்கள் எடுத்துள்ளார். அத்துடன் அவளை பலாத்காரமும் செய்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர் தனது லீலைகளை தொடர்ந்தார். இதன் தொடர்பில் அமெ ரிக்க மத்திய புலனாய்வு படை (எப்.பி.ஐ.) யிடம் புகார் செய்து விட்டனர்.
எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி என சொல்லி, தேஷ்பாண்டேயுடன் ஆன்லைனில் பழகி, அவர் மீதான புகார் உண்மைதான் என கண்டறிந்து கைது செய்தார்.
இந்த வழக்குகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தன. இப்போது தேஷ்பாண்டே தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை குற்றவாளி என தீர்மானித்து 30 ஆண்டு சிறைத்த ண்டனை விதித்து மாவட்ட நீதிபதி கார்லோஸ் மெண்டோஜா தீர்ப்பு அளித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்