இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கனமழை, புழுதிப் புயலுக்கு 30 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழையுடன் புழுதிப் புயலும் வீசி வருகிறது. இதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன. இதனால் சாலைகளில் பயணம் செய்வது ஆபத்து நிறைந்ததாகி விட்டது.
இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் 5பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உள்பட 7பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினை அடுத்து அதிகாரிகள் அவசர கால நிலையை அறிவித்தனர். இங்கு குழந்தை உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள புழுதிப் புயலில் சிக்கிய 6 மீனவர்களை காணவில்லை. 50க்கும் மேற்பட்டோர் காய மடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்