ஞாயிறு 08, டிசம்பர் 2019  
img
img

பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல் பாகிஸ்தானில் சம்பவம் 
சனி 20 ஏப்ரல் 2019 14:38:10

img

கராச்சி, 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல்,வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். 

இந்நிலையில் ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல், கராச்சி-கவாதர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டது. ஆர்மரா பகுதியில் ஒரு பேருந்தை நிறுத்தி, பேருந்தில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளை சோதனை செய்தனர். பின்னர் 16 பேரை கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்று, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர்  இறந்தனர்.  

2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்தனர். அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 

இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ஆயுதக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த படுகொலை யின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img