லிஸ்பன்,
போர்ச்சுகலில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலாத் தலமான இங்கு அயல்நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் மடெய்ராவின் தலைநகர் புஞ்சாலில் இருந்து, கடற்கரை நகரமான கனிகோவுக்கு ஜெர்மனி யைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. கனிகோவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பஸ் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தறிகெட்டு ஓடிய பஸ், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்