பெய்ஜிங், ஏப். 17-
நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கும் வகையில் ஆளில்லா ஆயுத படகை சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது போன்ற படகை உலகில் முதல் முறையாக சீனா தயாரித்துள்ளது.உலகின் மிகப் பெரிய ராணுவத்தை கொண்டுள்ள சீனா, கடந்த சில ஆண்டுகளாக புதிய ரக ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது ஆளில்லா ஆயுத படகு ஒன்றை சீனா உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய இந்தப் படகுக்கு கடற் பல்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படகு செயற்கைக்கோள் கட்டுப்பாட்டில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும். 12 மீட்டர் நீளமுள்ள இந்த படகு டீசலில் இயங்கக் கூடியது.அதிகபட்சமாக 50 நாட்ஸ் வேகத்தில் 1,200 கி.மீ தூரம் வரை செல்லும் திறன் படைத்தது. இந்த படகு தரையிலும் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த படகில் ரேடார் கருவிகள், இரண்டு இயந்திர துப்பாக்கிகள், கப்பல் மற்றும் விமானத்தை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. தீவுப் பகுதியில் தாக்குதல் நடத்தவும் கடலோர பாதுகாப்பு பணிக்கும் இந்த ஆளில்லா படகு பெரிதும் உதவியாக இருக்கும். ஆளில்லா தீவுகளிலும் இந்த படகை 8 மாத காலம் வரை செயலற்ற நிலையில் பதுக்கி வைத்திருக்க முடியும். சீனாவின் பேடோ நேவிகேஷன் செயற்கைக்கோள் மூலம் இந்த படகு செயல்படும்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்