வாஷிங்டன்,
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3ஆவது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மிகவும் அபாயகரமான 4ஆவது நிலையில் வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளா கங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர். கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்