வாஷிங்டன்,
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென்.மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரித்து தனித்தனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார்.
இவர் டிரம்ப்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்த நிலையில், கிர்ஸ்ட்ஜென் நீல்சென் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் எதையும் குறிப்பிடாத கிர்ஸ்ட்ஜென் நீல்சென் பதவியை துறக்க இதுதான் சரியான தருணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தற்காலிக உள்துறை மந்திரியாக சுங்க, எல்லை பாதுகாப்பு கமிஷ னர் கெவின் மெக்லீயன் பொறுப்பு வகிப்பார் என கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்