லண்டன்,
உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தி லான்ஸெட் ஆன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளது அதில் கூறி இருப்பதாவது:-
உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்ததுள்ள நிலையில் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும் பிரிட்டன் 23ஆவது இடத்திலும் சீனா 140ஆவது இடத்திலும் இந்தியா 118ஆ வது இடத்திலும் உள்ளன.
விதைகள், பால், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள், அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.
ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு, விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்ப ட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்களை 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.
சர்க்கரை, உப்பு, கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.
உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017-இல் 11 மில்லியன் என கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும் புற்றுநோயால் சுமார் 913,000 பேரும் நீரிழிவு 2 வகை நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எங்கள் ஆய்வில் பிரதான உணவு ஆபத்து காரணிகள் என்பது சோடியம் அதிக உட்கொள்ளல் அல்லது முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் குறைந்த அளவு உட்கொள்ளுதலும் ஆகும் என கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்