பெய்ஜிங்,
சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுரங்கப்பாதைக்குள் வழக்கமான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. தொழிலாளர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்தபடி சுரங்கத்தை விட்டு வெளியேறினர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்