img
img

டொனால்டு டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை பாலியல் புகார்
திங்கள் 24 அக்டோபர் 2016 12:52:50

img

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆபாசப் பட நடிகையான ஜெசிகா டிரேக் என்பவரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லேக் தஹூவில் நடந்த கோல்ப் போட்டியின்போது நான் டொனால்டு டிரம்ப்பை முதல்முதலாக சந்தித்தேன். அவர் என்னுடன் கடலை போட்டார். கோல்ப் மைதானத்தில் தன்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு கூறினார். பின்னர் என்னை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன். ஹோட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற இரண்டு பெண்களையும் இழுத்துப் பிடித்து கட்டிப்பிடித்தார். மேலும் எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்தமிட்டார். ஆபாசப் படங்களில் நடிப்பது எப்படி இருக்கும் என டிரம்ப் என்னிடம் கேட்டார். நான் என் அறைக்கு வந்த பிறகு டிரம்ப் போன் செய்து தனது அறைக்கு வருமாறு அழைத்தார். எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டார். டிரம்ப் மீண்டும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எனது வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என்றார். டிரேக் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். டிரம்புக்கு டிரேக் யார் என்றே தெரியாது. இது டிரம்ப்பின் பெயரை கெடுக்க கிளிண்டன் ஆதரவாளர்கள் செய்த வேலை என டிரம்ப் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img