வாஷிங்டன்,
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீது மேலும் 3 பெண் பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது, 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை துணை அதிபராக பதவி வகித்தவர் ஜோ பிடென். இவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்குவதற்கு பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், பெண்கள் சிலர் ஜோ பிடன் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (வயது 39), ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளரான எமி லேப்போஸ் (43) உள்பட 4 பெண்கள் ஜோ பிடென், அனுமதியின்றி தங்களை தொட்டதாகவும் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தி இருந்தனர்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான வைல் கோனெர்ட், ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் யாலி கோல் மற்றும் சோபி காரசிக் ஆகிய மேலும் 3 பெண்கள் ஜோ பிடென் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். முன்னாள் துணை அதிபர் மீது அடுத்தடுத்து 7 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்