கொழும்பு,
மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் லாபம் தேடுகிறது.அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் பேசிய வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்