கொழும்பு,
இலங்கை கடற்படையைப் பலப்படுத்துவதற்காக, புதிதாக போர்க்கப்பல்கள், படகுகள் கொள்முதல் செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
இலங்கை கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள் கிடைத்தன. அமெரிக்காவும் ஒரு போர்க்கப்பலை வழங்க முன்வந்துள்ளது. அந்தக் கப்பல் அடுத்த சில மாதங்களுக்குள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படைக்கு சீனாவும் ஒரு போர்க்கப்பலை வழங்கவுள்ளது.கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு ஜப்பான் இரண்டு படகுகளை வழங்கவுள்ளது.
கடற்படையும் கடலோரக்காவல்படையும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேலும் பல ரோந்துப் படகுகளைப் பயன்படுத்தும். எதிர்காலத்தில் எந்த வொரு போரையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் இலங்கை படையை பலப்படுத்த இது ஆக்கப்பூர்வமான திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்