லண்டன்,
பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் அமைச்சர் நைஜல் ஆடம்ஸ் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 4ஆவது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் இதற்கு எதிராக வேல்ஸ் பகுதிக்கான அமைச்சர் நைஜல் ஆடம்ஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். ஜெரேமி கார்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார். பிரதமர் தெரசா மேவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்