மஷார் இ ஷெரிப்,
ஆப்கானிஸ்தானில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 8 போலீசார் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மீதான தங்களது தாக்குதல்களை தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பால்க் மாகா ணம், சோல்கரா மாவட்டத்தின் சாய்கான் கிராமத்தில் ஏ.எல்.பி. என்னும் ஆப்கானிஸ்தான் உள்ளூர் போலீஸ் முகாம் செயல்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு அந்த முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கிகளையும் கையெறிக் குண்டுகளை யும் கொண்டு நடத்திய இந்த தாக்குதலால் அங்கிருந்த போலீசார் நிலைகுலைந்து போயினர். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு அவர்கள் தலிபான் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் தொடுத்தனர்.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதன் முடிவில் 8 போலீசார் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து, சரியான தகவல் இல்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்