வாஷிங்டன்,
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜோ பிடென் (வயது 76). இவர் 1973ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் செனட் சபை எம்.பி. பதவி வகித்தவர்.
ஒபாமா அதிபராக இருந்தபோது, 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை துணை அதிபர் பதவி வகித்தார். அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39) என்ற பெண் சமீபத்தில் ஜோ பிடென் மீது பரபரப்பு செக்ஸ் புகார் எழுப்பினார். இது குறித்து அவர் அங்கு வெளிவருகிற தி கட் என்ற பத்திரிகையில் எழுதினார்.
அதில் அவர், நான் 2014ஆம் ஆண்டு, நெவேடா மாநிலத்தின் துணை ஆளுநர் பதவிக் கான தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, ஜோ பிடென் வந்தார். நான் மேடையில் ஏறுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஜோ பிடென் எனது பின்னால் வந்து, என் தோள்கள் மீது தனது கைகளை வைத்து அழுத்தினார். என் தலையை முகர்ந்தார். என் பின்தலையில் முத்தமிட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் எழுப்பி இருக்கிறார். இந்தப் பெண்ணின் பெயர் எமி லேப்போஸ் (43). இவர், ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளர் ஆவார். இருப்பினும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட எண்ணியுள்ள நிலையில், ஜோ பிடென் இந்த குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்