img
img

டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது 
வியாழன் 04 ஏப்ரல் 2019 13:24:50

img

வாஷிங்டன், 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வைரஸ் நிறைந்த பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் விசாரித்தனர். அந்தப் பெண் உள்ளே நீச்சல் குளத்திற்கு குளிக்கச் செல்வதாகக் கூறியுள்ளார். 

ஆனால் அவரின் கைகளில் எவ்வித நீச்சல் உடைகளும் இல்லை. மேலும் நடவடிக்கைகளிலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்தப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் போது அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று, வரவேற்பாளரிடம் விசாரித்தனர். அப்போது அந்தப்பெண் ஐக்கிய தேசிய சீன அமெரிக்க கூட்டுறவு சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளதாகக் கூறியது தெரிய வந்தது. 

இதையடுத்து விசாரணையில்  பொய் கூறியதால் அந்தப்பெண்ணை கைது செய்தனர். அவர் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்ததில், 2 சீன கடப்பிதழ்கள், வைரஸ் நிரம்பிய பென்டிரைவ், ஹார்ட் வேர், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பாஸ்போர்ட் சீன மொழியில் எழுதப்பட்டிருந்ததால் இரண்டாம் கட்டமாக வேறொரு இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  

இங்கு நடத்திய விசாரணையில் ஜங் கூறுகையில்,  சீனாவைச் சேர்ந்த என் நண்பர் சார்லஸ், சீனா, அமெரிக்காவிற்கு இடையே உள்ள பொருளாதார தொடர்பு குறித்து அதிபரின் குடும்ப உறுப்பினரிடம் பேசுமாறு என்னை அனுப்பி வைத்தார். இதற்காகவே நான் வந்தேன் என கூறியுள்ளார். அந்தப் பெண் அளித்த தகவல்களில் முரண்பாடு இருப்பதையடுத்து, சார்லஸ் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img