பெய்ஜிங்,
சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியரை கைது செய்த போலீசார் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாநிலத்தின் ஜியாவோஷு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு 4 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகளுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தை களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் 16 குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 7 குழந்தைகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் வாங் என்ற ஆசிரியர், சக பணியாளரை பழிவாங்கும் எண்ணத்தில் காலை உணவில் உள்நோக்கத்துடன் சோடியம் நைட்ரேட் என்ற நச்சு வேதிப்பொருளை அதிக அளவில் சேர்த்தது தெரியவந்தது. இதன் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் வாங்-ஐ போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மழலையர் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. அதில் உள்ள குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்