img
img

இந்தியாவிற்கு 24 ரோமியோ ஹெலிகாப்டர்கள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல் 
வியாழன் 04 ஏப்ரல் 2019 13:18:38

img

வாஷிங்டன், 

இந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து ள்ளது. அமெரிக்காவிடம் இருந்து  24  ரோமியோ ரக ஹெலிகாப்டர்களை கடந்த ஆண்டு வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அவசியம் தேவை என கூறப்பட்டு வந்தது.  

இதையடுத்து ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்நிலையில் இந்தியாவிற்கு தற்போது 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் தற்போது தேவை என்பதை உணர்ந்து, விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. ரோமியோ ஹெலிகாப்டர்கள் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளிலும் அவசர காலங்களில் கப்பலுடன் இணைத்து பயன்படுத்தவும் உதவும்.  மேலும் பிரிட்டனின் பழைய கடல் கிங் ஹெலிகாப்டர்களில் இல்லாத புதிய நுட்பங்கள் பல இவற்றில் உள்ளன. அவற்றிற்கு மாற்றாக இந்த ரோமியோ ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img