லிமா,
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரட்டை அடுக்கு பஸ் தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் சிக்லாயோ நகரை நோக்கி ஒரு இரட்டை அடுக்கு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. வழியில் சான் மார்ட்டின் டி போர்ரெஸ் மாவட்டத்தில் உள்ள நிறுத்தத்துக்குள் நேற்றிரவு நின்றிருந்த அந்த பஸ்சின் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
சில நொடிகளுக்குள் பஸ்சின் இருக்கைகள் வழியாக மளமளவென்று பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக, மேல் அடுக்கு படுக்கையில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வர முடியாமல் தவித்தனர். இதற்குள் பயங்கர சத்தத்துடன் பஸ்சின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். காயங்களுடன் பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்