கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூன்று மாதங்களுக்கு மூடுவதால் சில நெருக்கடியான நிலை ஏற்பட கூடும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படும். இது தொடர்பில் அனைத்து விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறு நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்நால் சில வருடங்களில் விமானங்களை தரை யிறக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் விமான ஓடு தளங்களை விஸ்தரிக்க வேண்டும். இதற்கு மாற்று வழியாக மத்தல விமான நிலையத்தை பயன்படுத்துவது என்பது கடினமாக ஒரு விடயம். எனவே இதனால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் அனைத்து விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரை யாடல் மேற்கொள்ளப்பட்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.இன்னும் 20 வருடங்களில் மிகவும் வலுவான ஒரு விமான நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையம் மாற்றமடையும். தொழில்நுட்ப ரீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதன் போது பாரிய நெருக்கடிகள் ஏற்பட கூடும்.எனினும் அது நீண்ட கால நெருக்கடிக்கு நிலையான தீர்வு என போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்