img
img

இரண்டாவது கொலை முயற்சில் உயிர் தப்பினார் துணை அதிபர் 
செவ்வாய் 02 ஏப்ரல் 2019 14:16:55

img

காபுல்,

தலிபான்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் இருந்து ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அப்துல் ரஷித் தோஸ்ட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆப்கானிஸ்தானில் 2000ஆம் ஆண்டு துவக்கத்தில் தலிபான்கள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கி பலரை சிறைபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ராணுவ தளபதி அப்துல் ரஷித் டோஸ்ட்டும். 

சுமார் 2 ஆயிரம் தலிபான்களை கொன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ரஷித் டோஸ்ட்டும் இதை மறுத்து வருகிறார்.கடந்த 2014ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுடன் முதன்முறையாக துணை அதிபர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற டோஸ்ட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபராக பதவியேற்றார்.  

சில ஆண்டுகள் துருக்கி நாட்டில் வாழ்ந்துவந்த அப்துல் ரஷித் டோஸ்ட்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காபுல் நகர விமான நிலையத்தின் அருகே இவரை கொல்ல நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  

இந்நிலையில், ஜாவ்ஸான் மாகாணத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை அதிபர் டோஸ்ட்டும் வந்த வாகனத்தின் மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பியதாகவும் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆப்கானி ஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img