img
img

தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம் -
திங்கள் 24 அக்டோபர் 2016 12:37:22

img

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சுமார் 4 மணித்தியாலங்களுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட் டம் 11.30 மணிக்கு முடிவடைந்தது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக தடைப்பட்டிருந்த A9 வீதியூடான போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது. சுமார் 1500இற்கும் மேற்பட்ட மாணவர்கள் A9 பிரதான வீதியில் அமர்ந்திருந்து பல பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பின்னர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் செயலாளரிடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்தார்கள். யாழ்.மாவட்ட செயலக வாயில் கதவுகள் அனைத்தையும் அடைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்ததால் செயலக பணிகள் யாவும் 100% முடக்கப்பட்டது.மாணவர்கள் தமது போராட்டத்தை இடை நிறுத்திக் கொண் டதன் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் அலுவலகர்கள் சென்று பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். மேலும் தமது போராட்டம் முடிவடைந்து விடாது எனவும், உயிரிழந்த மாணவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்தார்கள்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img