லண்டன்,
பஞ்சாப் தேசிய வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் அவரது ஜாமீன் மனு 2-ஆவது முறையாக நேற்று முன் தினமு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இந்தியா சார்பில் ஆஜரான கிரவுண் சட்டப்பணிகள் குழு வக்கீல்களிடம் பேசிய நீதிபதி எம்மா அர்பத்னோட், நிரவ் மோடியை நாடு கடத்தினால் எந்த சிறையில் அடைக்கப்ப டுவார் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ’ஏற்கெனவே விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடை க்கப்படுவார்’ என்று கூறினார். உடனே நீதிபதி, ’மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்’ என இளகிய மனதுடன் கேட்டார்.
முன்னதாக, நிரவ்மோடிக்கு வயதான பெற்றோரும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மகனும் இருப்பதாகவும் அத்துடன் அவர் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறிய அவரது வழக்கறிஞர் கிளேர் மோண்ட்கோமெரி, அவர்களை பராமரிப்பதற்காக நிரவ் மோடியை ஜாமீனில் விட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் நீதிபதி அவரது வாதத்தை ஏற்கவில்லை.
இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே அதை முன்வைத்து இந்த வாதத்தை நிரவ் மோடி தரப்பு எடுத்து வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்