வாஷிங்டன்,
இந்தியாவின் செயற்கைகோள் அழிப்பு சோதனையால், விண்ணில் சிதறி சுற்றிக் கொண்டிருக்கும் 270 துகள்களை அமெரிக்கா கண்காணித்துக் கொண்டிருக்கிறது என அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகணை சோதனையை இந்தியா கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. புவியின் கீழ் சுற்று வட்டப்பாதையில் (லியோ) சுற்றிக் கொண்டிருந்த இந்திய செயற்கைகோள் ஏவுகணை வீசி அழிக்கப்பட்டது.
செயற்கைகோளின் சிதறிய பாகங்கள், விண் துகள்களாக தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை இன்னும் இரண்டு வாரத்தில் பூமியில் நுழைந்து எரிந்து சாம்பலாகிவிடும் அல்லது சில துகள்கள் கடலில் விழும். புவியின் கீழ் சுற்றுவட்டப் பாதையில் இந்த சோதனை நடந்ததால், இதன் துகள்களால் மற்ற செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்தியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த சோதனையால் விண்ணில் சிதறிய 270 பாகங்கள், விண் துகள்களாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அது பூமியின் மேற்பரப்பிற்குள் நுழையும் வரை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.அமெரிக்க பாது காப்புத் துறையின் கீழ் செயல்படும் விண்வெளி கண்காணிப்பு அமைப்பு இப்பணியில் ஈடுபட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்