நியூயார்க்,
தன் தோல் பற்றி எரியும்போதுகூட வலியை உணராத ஜோ கேமரூன், அதிலிருந்து கிளம்பும் புகை வாசத்தின் மூலமே ஒவ்வொரு முறையும் அதை உணருகிறார். ஜோ உள்பட உலகில் இருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோதமான பிரச்சினைக்கு மிகவும் அரிதான மரபணு பிறழ்வே காரணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, ஜோ தனது தோல் பற்றி எரிவதால் வலியை உணரவில்லை, பயப்படவில்லை, எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. ஜோவிற்கு 65 வயதிருக்கும்போது ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில் அவருக்கு வலி நிவாரணியே தேவைப்படவில்லை என்பதை கண்ட றிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு இதுபோன்ற வித்தியாசமான மரபணு அமைப்பு உள்ளது என்பதே ஜோவிற்கு அதுவரை தெரியாது.
ஜோவின் கையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு அந்த பகுதியில் தொடர் வலி இருக்குமென்று மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால், வலியை சிறிதும் உணராத ஜோ, தனக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அளித்த மருத்துவர் தேவ்ஜித் ஸ்ரீவஸ்தவாவை தொடர்பு கொள்ள, அவர் லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களிலுள்ள மரபியல் ஆராய்ச்சியாளர்களை சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.
பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், ஜோவின் அசாதாரணமான உடல்நிலைக்கு அவரது மரபணுவில் ஏற்பட்டுள்ள பிறழ்வே காரணமென்பது கண்டறி யப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள இன்வெர்ன்ஸ் நகரத்தை சேர்ந்த ஜோ, தனக்கு அறுவை சிகிச்சை நடந்த பிறகு அதற்குரிய வலி நிவாரணி மாத்தி ரைகளே தேவைப்படவில்லை என்று தான் மருத்துவர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவே இல்லை எனக் கூறுகிறார்.
இதன் பிறகே, ஜோவை பிரிட்டனிலுள்ள சிறப்பு மருத்துவர்களை சென்று சந்திக்குமாறு அந்த மருத்துவர் கூறினார்."என்னுடைய சென்ற கால நினை வுகளை மீட்டெடுக்கும்போது, நான் வலி நிவாரணிகளை பயன்படுத்தவே இல்லை என்பது தெரியவந்தது. நம்மை பற்றிய வித்தியாசமான ஒன்றை யாரா வது ஒருவர் சுட்டிக்காட்டும்வரை அதுகுறித்து நமக்கு தெரிவதில்லை."
"நான் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன், அவ்வளவுதான். அதை தவிர்த்து நான் வலியை உணரவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் அந்த தருணத்தில் உற்சாகமாக இருந்தேன்" என்று தனது பிரசவ வலி குறித்து கூறுகிறார் ஜோ.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்