மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியின்போது பிரதி அமைச்சராக இருந்த சரத்குமார குணரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2002ஆம் ஆண்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டிருந்த வர்கள் மீது விபத்தை ஏற்படுத்தி ஒருவரை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை சரத்குமார குணரத்ன, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.மஹிந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த சரத்குமார குணரத்னவை எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஷ்யந்த எபிட்வல உத்தரவிட்டுள்ளார். சரத்குமார குணரத்ன இன்று காலை நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்