இஸ்லாமாபாத், மார்ச் 30-
பாகிஸ்தானில் 22 இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் இருப்பதாக இந்தியா கூறியதைபோல், எவ்வித தடயமும் இல்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா சில ஆதாரங்களை, பாகிஸ்தான் அரசிற்கு சமர்ப்பித்தது. இந்த கோப்புகளை ஆராய்ந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு குறித்து, இந்தியா 6 பகுதிகளாக 91 பக்கங்கள் உடைய ஆவணங்களை சமர்ப்பித்தது. இந்த ஆவணத்தொகுப்பில் பாகிஸ்தான் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள் பல உள்ளன. முற்றிலும் பாராமல், புல்வாமா தாக்குதல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மட்டும் தனியே எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவற்றில் பாகிஸ்தானில் 22 இடங்களில் பயங்கரவாதிகள் முகாமிட்டு செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் எவ்வித முகாம்களும் இல்லை. இந்தியா இந்த இடங்களை பார்வையிட விரும்பினால், பாகிஸ்தான் அரசு அனுமதிக்கத் தயாராக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்