கௌதமாலா சிட்டி,
கௌதமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லோரி புகுந்து நசுக்கியதில், 30 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் படுகாயமுற்றனர். மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக வந்த லோரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. நகராட்சி அலுவலகம் அருகே இந்த விபத்து நடந்தது. லோரியில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 30 பேர் பலி யாகினர். இந்த துயர சம்பவத்தில் 17 பேர் படுகாயமுற்றனர். உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்க ளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கௌதமாலாவின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்