டாக்கா,
வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேச நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்