டாக்கா,
வங்காளதேசம் நாட்டை சேர்ந்த ஒரு பெண் இரட்டை கருப்பைகள் மூலம் அடுத்தடுத்து இரு மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். வங்காள தேசத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதி. இங்குள்ள ஷர்ஷா கிராமத்தைச் சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது ஆரிஃபாவுக்கு இரட்டை கருப்பைகள் இருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே, பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி ஆரிஃபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குப் பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22-இல் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்