ஆம்ஸ்டர்டாம்,
பிரான்சில் திருடப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம் 20 ஆண்டுக்குப் பிறகு நெதர்லாந்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938ஆம் ஆண்டு தன் காதலியும் புகைப்படக் கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் தீட்டினார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இதனை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். ஆனால் கடந்த 1999ஆம் ஆண்டு அவர் தனது சொகுசு கப்பல் மூலம் பிரான்ஸ் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அவரிடம் இருந்து இந்த ஓவியத்தை திருடிச் சென்றனர்.
இந்த நிலையில் 20 ஆண்டுக்குப் பிறகு தற்போது அந்த ஓவியம் நெதர்லாந்தில் கிடைத்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த கலை துப்பறிவாளரான ஆர்தர் பிராண்ட், பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த ஓவியத்தை மீட்டுள்ளார். இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என கூறும் ஆர்தர் பிராண்ட், இந்த ஓவியம் தன் கைக்கு வருவதற்கு முன் கள்ளச்சந்தை மூலமாக 10-க்கும் மேற்பட்டோரிடம் கை மாறி இருக்கிறது என்றும் கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்