சனா,
ஏமனில் மருத்துவமனை மீது கிளர்ச்சியாளர்கள் வீசிய குண்டு வீச்சில் மருத்துவ ஊழியருடன் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபர் ஆதரவு படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் அதிபருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாடா நகரில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அப்போது அங்குள்ள ஒரு மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டது. இதில் அதன் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் இதில் சிக்கினர். மருத்துவ ஊழியர், 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்