இஸ்லாமாபாத்,
விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. செயற்கைகோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா நடத்தியது பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-
விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது.
எனவே, கடந்த காலங்களில் இதேபோன்ற சோதனையை பிற நாடுகள் செய்தபோது கண்டித்த நாடுகள் எல்லாம், விண்வெளிக்கான ராணுவ அச்சுறுத்தலை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்