மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஒரு கிராமத்தில் புகுந்த வேட்டைக்காரர்கள் அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி மக்கள் 130 பேரை கொடூரமான முறையில் கொன்று குவித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாலி நாட்டில் உள்ள தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது தோகோன் வேட்டைக்காரர்கள் புலானி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று, அவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதே போல நேற்று முன்தினம் புலானி இந மக்கள் வாழும் கிராமத்திற்குள் புகுந்த வேட்டைக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். தாங்கள் கையில் கொண்டுவந்த கத்தி, ஈட்டி போன்ற கூர்மையான ஆய்தங்களால் கண்ணிபட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை கொன்ற தோகோன் வேட்டைக்காரர்கள் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்குள் புகுந்து மக்களை கொன்று அந்த கிராமத்தையே சூறையாடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்