பெய்ரா,
கிழக்கு ஆப்பிரிக்கா, மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த வாரம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் இடாட் புயல் தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அருகிலுள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியை இந்த கோரப்புயல் பதம் பார்த்தது. இந்த புயலின் தாக்கத்தால் மொஸாம்பிக் நாட்டின் சில பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
புயலை தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஏற்கெனவே வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மொசாம்பிக் நாட்டில் மட்டும் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.பல பகுதிகளில் சூழ்ந்தி ருந்த வெள்ளம் மெல்ல வடிந்துவரும் நிலையில் இடாட் புயல், மழை, வெள்ளத்தில் 417 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்தது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்