சியோல்,
தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணைய தளத்தில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்கொரி யாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.
இந்த நிலையில் மர்மக் கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாகப் படம் பிடித்து, இணைய தளத்தில் விற்று, பணம் சம்பாதித்தது அம்பலமாகி உள்ளது. இதனால் சுமார் 1,600 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும், அதன் மூலம் 6,200 டாலர் வரை சம்பாதித்த தாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்