வாஷிங்டன்,
அமெரிக்காவில் யூடியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணைய தளத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன் மூலம் பல முறைகளில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பிரபலங்களாக மாற்றி வருகின்றனர்.
அவ்வகையில் உருவாக்கப்பட்டது தான் ஃபெண்டாஸ்டிக் அட்வென்சர்ஸ் எனும் யூ டியூப் சேனல். இதனை மச்செல் ஹாக்னி(48) எனும் பெண் உருவாக்கியுள்ளார். இதற்காக 6 முதல் 15 வயதுடைய 7 குழந்தைகளை தத்தெடுத்து குழந்தை நட்சத்திரங்களாக வளர்த்துள்ளார்.
இந்த யூ டியூப் சேனலை 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவும் 25 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த சேனலில் பிரபலமான குழந்தைகள் பங்கு பெறும் குக்கி கேப்ச்சர் மிஷன் மற்றும் சூப்பர் பவர் பேபி பேட்டில் எனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, ஒரு வசனத்தை மறந்தாலோ, உணவு, தண்ணீர் என எதுவும் கிடைக்காது. சில நேரங்களில் ஐஸ் கட்டியில் குளிக்க சொல்வதுமுண்டு. குழந்தைகளை ஓர் இருட்டு அறையில் அடைத்து 2,3 நாட்கள் அப்படியே பசியிலும் தாகத்திலும் விட்டுவிடுவதும் உண்டு.
இதுபோன்ற சித்ரவதைகளை தொடர்ந்து, 7 குழந்தைகளில் 6 குழந்தைகள் போலீசாரை நாடியுள்ளனர். இதையடுத்து கடந்த வாரம் போலீசார் ஹக்னி மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்தனர். இந்நிலையில் ஹக்னியின் யூ டியூப் சேனலை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக யூ டியூப் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்