img
img

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயார் 
புதன் 20 மார்ச் 2019 16:30:01

img

கொழும்பு, மார்ச் 20-

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா கூறியுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு  விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களைக் கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்தக் குற்றமும் செய்ய வில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. நமது நீதித்துறையே விசாரணை நடத்தலாம். அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இது கடினமான உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களைக் கொன்றோம் என்று அர்த்தம் அல்ல. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள் எனக் கூறினார். 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img