சான்பிரான்சிஸ்கோ,
ஆபாச படங்களை நீக்க ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவற்றையெல்லாம் அந்த சமூக வலைதளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் உலக பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஆன்டிகான் டேவிஸ் கூறியதாவது:-பேஸ்புக் சமூக வலைதளத்தில் (சம்பந்தப்பட்ட வர்களின்) எந்தவித அனுமதியும் இன்றி ஆபாசப் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை நீக்குவதற்கு புதிய தொழில் நுட்பங்கள் உதவும்.
அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எங்கள் வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிற ஆபாசப் படங்கள், வீடி யோக்கள் பற்றி புகார்கள் வருமுன்னரே மனித மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அனுப்பப்படும். யாரோ சிலரின் நெருக்கமான காட்சிகளைக் கொண்ட படங்களை வெளியிடுகிறபோது அது பேராபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே அவற்றை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்குவோம். முதலில் இதை சோதனை ரீதியில் பயன்படுத்தி விட்டு, பின்னர் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்தத்தக்கதாக விரிவுபடுத்துவோம் எனக் கூறி உள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்