வாஷிங்டன்,
மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அவசர சட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தால் நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 26ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
இதனால் அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின் தெற்கு பகுதியில் எல்லை சுவர் கட்டுவதற்கு 800 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்யும் அவசரநிலை பிரகடனத்தை கடந்த மாதம் டிரம்ப் பிறப்பித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியின் சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் டிரம்ப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து 182 உறுப்பினர்களும் எதிராக 245 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது வீட்டோ (சிறப்பு) அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரிக்கும் உத்தரவில் கையொப்பமிட்டார். இந்நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் 26ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்