கொழும்பு,
சிறுபான்மையினரான தமிழர்களின் ஆதரவு இன்றி சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. 2010-இல் மகிந்த ராஜபக்சே, தமிழர்களின் ஆதரவு இல்லாமல் 1.8 மில்லியன் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
2015-இல் அவர் தோல்வியடைந்தது தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காததால் அல்ல. கொழும்பு, கம்பகா போன்ற மாவட்டங்களில் உள்ள நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் 449,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
அந்த சாதகமற்ற சூழ்நிலையில் கூட மகிந்த ராஜபக்சேவுக்கு, வடக்கில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் கிடைத்தன.ஆகையால் இம்முறை அதிபர் தேர்தலில் களமிறங்கினால் தமிழர்களின் ஆதரவின்றி வெற்றி பெறக்கூடும் என அவர் சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்