வாஷிங்டன்,
அமெரிக்காவில் மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர் பாரி டவ்சன் 84, இவர் மனைவி டோரத்தி 80. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவியின் டார்ச்சர் தாங்காமல் காது கேளாதவர் போல் பாரி டவ்சன் நடிக்கத் துவங்கியுள்ளார்.
இப்படியே 62 ஆண்டுகளை நகர்த்தி விட்ட நிலையில், சமீபத்தில் யூடியூப் வீடியோவில், கரோக்கி இசையை கேட்டு தலையை ஆட்டியபடி பாரி டவ்சன் பாடியுள்ளது சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதைப் பார்த்து குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் என்றாலும், அவர் மனைவியோ காது கேளாதவர் போல் நடித்து தம்மை ஏமாற்றியுள்ளாரே என நினைத்து கோபமாகி, விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார்.இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள். 13 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பாரி டவ்சன்னை காது கேளாதவர் என்றே நினைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் மனைவி டோரத்தி கூறியது: வீட்டில் இருக்கும் போதெல்லாம் காது கேளாதவர் போன்றே இருப்பார். அவருடன் பேசுவதற்கு சைகைகளைப் பயன்படுத்த துவங்கினேன். பின், சரியாக தெரியவில்லை என்று என் சைகைகளையும் அலட்சியப்படுத்தினார். இப்போது தான் தெரிகிறது எல்லாமே ஏமாற்று வேலை என்று என கடுகடுக்கிறார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்