வாஷிங்டன்,
அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது ராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதாக நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தா மெக்சலி கூறினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபை உறுப்பினராக இருப்பவர் மார்தா மெக்சலி. இவர் அரி சோனா மாநிலத்தில் இருந்து 2ஆவது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கெனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். 18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதி யாக கலோனல் அதிகாரியாக இருந்தார்.2010-ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் இருந்தன.
இதில் தனக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக மார்தா மெக்சலி கூறினார். விமானப்படையில் இருந்த போது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார்.அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மௌனம் காத்தேன் என்று அவர் கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்