கொழும்பு,
இலங்கை போர் குற்ற விசாரணை தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை போரில் இருதரப்பிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடைபெற உள்ள 40ஆவது ஐ.நா. மனித உரிமை வாரியக் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்து இருந்த இலங்கை அதிபர் சிறிசேனா, திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு லங்கையில் யாருடைய தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு சில காலம் தேவை என்றும் ஐ.நா. கூட்டத்துக்கு எனது சார்பில் ஒரு குழுவை அனுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மறுநாளே இதற்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளார்.இலங்கை தனது வாக்குறுதியை தொடர்ந்து செயல்படுத்தும். ஐ.நா. தீர்மானப்படி ஒரு நீண்டகால மற்றும் நிலையான சமரச தீர்வை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளும். நடைபெற இருக்கும் 40ஆவது ஐ.நா. கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் காலஅவகாசம் கேட்கப்படும் என அவர் கூறினார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்