மெல்பர்ன்,
ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் பிரீத்தி ரெட்டி கொலை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி ரெட்டி பல் மருத்துவராக இருந்தார். கடந்த வார இறுதியில், சிட்னியின் செயின்ட் லியோனார்ட்ஸ் பகுதியில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்க சென்ற அவர் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணை நடத்திய நியூ சவுத் வேல்ஸ் போலீசார் பரபரப்பான சிட்னியின் ஜார்ஜ் தெருவில் உள்ள மெக்டொனால்ட் கடையில் பிரீத்தி தண்ணீர் பாட்டில் வாங்கி சென்றதை, கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டுபிடித்தனர். இந்நிலையில் கிங்ஸ்போர்டு பகுதியில் பிரீத்தியின் கார் நிற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் காரில் இருந்த, பெரிய பெட்டியை திறந்து பார்த்தனர்.
அதில், பிரீத்தியின் உடல், கத்திக் குத்து காயங்களுடன் இருந்தது. பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற பிரீத்தியுடன் ஹோட்டலில் தங்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் பிரீத்தியின் முன்னாள் காதலர் ஹர்ஷ் நார்டே என்பதும் இரு நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்