வாஷிங்டன்,
அமெரிக்கா தயாரிப்பான, எப் - 16 ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பாக்., தவறாக பயன்படுத்தியது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான, பாக்.,கின் பாலகோட்டில் உள்ள, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாமை, இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தி அழித்தன. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குள் நுழைவதற்கு, பாக்., விமானம் முயன்றது. இந்தியாவுக்குள் நுழைந்து, ராணுவ முகாம்களை தாக்கு வதற்கு, அமெரிக்க தயாரிப்பான, எப் - 16 ரக விமானத்தை, பாக்., பயன்படுத்தியது குறித்து, அமெரிக்காவிடம் மத்திய அரசு ஆதாரங்களுடன் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை துணை செய்தித் தொடர்பாளர், ராபர்ட் பலாடினோ கூறியதாவது: அமெரிக்கா தயாரிப்பான, எப் - 16 போர் விமானத்தை, பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தியது குறித்து அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைப் பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக, பாக்.,கிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்