img
img

வீட்டில் வளர்த்த சிங்கம் கடித்து வாலிபர் பலி!
வெள்ளி 08 மார்ச் 2019 13:56:50

img

பராகா, 

வீட்டில் வளர்த்து வந்த சிங்கத்திற்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கேல் பிராசெக்கை சிங்கம் கடித்து குதறியதில் சம்பவ இடத்தி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில், ஸ்லின் மாநிலத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் பிராசெக் (வயது 33). இவர், தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம், 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார்.

இனப்பெருக்கம் செய்ய வைக்கும் நோக்கில், சிங்கங்களை வளர்த்து வந்த அவர் அதற்கான முறையான உரிமங்கள் எதையும் பெறவில்லை என கூறப்ப டுகிறது. இதற்காக அந்த கிராம நிர்வாகம் அவருக்கு ஏற்கெனவே அபராதம் விதித்தது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்கேல் பிராசெக், தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக சைக்கிளில் சென்ற நபரை சிங்கம் தாக்கியது. இது அங்கு பெரும் பிரச்சினையானது.

எனினும் செக் குடியரசின் சட்டப்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்பட வில்லை.வழக்கம் போல உணவு வைப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை  கூண்டுக்குள் சென்ற மைக்கேல் பராசெக்கை, ஆண் சிங்கம் கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே  இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மைக்கேல் பிராசெக்கின் உடலை மீட்பதற்காக 2 சிங்கங்களையும் சுட்டுக் கொன்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img