எடின்பர்க்,
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாக்சோ பல்கலைக்கழக வளாகத்தில் கிடந்த மர்ம பொட்டலத்தால் (பார்சல்) பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்காட்லாந்தில் அமைந்துள்ளது கிளாஸ்கோ பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகத்தின் ஓர் அறை வாயிலில் மர்ம பார்சல் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அதில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த அப்பொட்டலத்தை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த பொட்டலத்தை அனுப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லண்டன் விமான நிலையத்தில் மர்ம பார்சல் அனுப்பியவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, செவ்வாயிரவு (5.3.19) ஹீத்ரு விமான நிலையம் உள்பட லண்டனில் உள்ள விமான நிலையங்களுக்கு பொட்டலங்கள் மூலம் வெடிபொருட்களை அனுப்பி மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்