அல்ஜியர்ஸ்,
அல்ஜீரியாவில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் தற்போதைய அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அல்ஜீரியா நாட்டில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு 5ஆவது முறையாக போட்டியிடப் போவதாக தற்போதைய அதிபர் அப்தலசீஸ் போதேபிலிகா கடந்த ஜனவரி 28ஆம் தேதி அறிவித்திருந்தார்.
ஆனால், 81 வயது நிரம்பிய அதிபர் அப்தலசீஸ் போதேபிலிகா, நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தலைநகர் அல்ஜியர்சில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு, அதிபர் பத விக்கு போதேபிலிகா போட்டியிடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக அதிருப்தி பதாகைகளை தாங்கி முழக்கங்கள் எழுப்பி னர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
அதிபர் மாளிகை உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டன. இந்த எதிர்ப்புக்கு மத்தியில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்